/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலரில் சுற்றும் மாணவர்கள்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
/
டூவீலரில் சுற்றும் மாணவர்கள்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
டூவீலரில் சுற்றும் மாணவர்கள்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
டூவீலரில் சுற்றும் மாணவர்கள்; அதிகாரிகள் கண்காணிப்பு தேவை
ADDED : ஜூலை 02, 2024 06:15 AM
ஆர்.எஸ்.மங்கலம் : பள்ளி மாணவர்கள் பைக்கில் வேகமாக செல்கின்றனர். அவர்களை கண்காணித்து எச்சரிக்கை செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் சிலர் பைக்கில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். 18 வயது பூர்த்தியடையாத மாணவர்கள் பைக் ஓட்டினால் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதிய விழிப்புணர்வு இன்றி 18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் டூவீலரில் ஊர் சுற்றி வருவது அதிகரித்துள்ளது. மாணவர்கள் விபத்துக்களில் சிக்குவதுடன், எதிர்வரும் வாகன ஓட்டிகளும் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பள்ளிகளில் கல்வித்துறை, போலீஸ் அதிகாரிகள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.