
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி ஊராட்சியில் பிரதான ரோடு சேதமடைந்துள்ளது. பள்ளிவாசல் ரோடு முதல் கிழக்கு தெரு வரை சேதமடைந்த ரோட்டில் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.
தெருக்களில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் ரோட்டில் தேங்கி குட்டையாக மாறியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக் கேடாக உள்ளது. வெயில், மழைக் காலங்களில் தொடர்ந்து கழிவுநீர் ரோட்டில் ஓடிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே எக்ககுடி ஊராட்சி நிர்வாகத்தினர் புதிய சாலை அமைத்து, கழிவுநீர் வாறுகால்வாய் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.