/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை கால பயிற்சி முகாம் நிறைவு: சான்றிதழ் வழங்கல்
/
கோடை கால பயிற்சி முகாம் நிறைவு: சான்றிதழ் வழங்கல்
ADDED : மே 15, 2024 06:43 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடந்தது. இதன் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் கலைப்பண்பாட்டுத்துறை,ஜவஹர் சிறுவர் மன்றம் இணைந்து 6 முதல் 16 வயதுமாணவர்களுக்குகோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு பரதம், சிலம்பம், பாட்டு, ஓவியம் ஆகிய பயிற்சிகள் மே 5 முதல் 14 வரை நடத்தப்பட்டது.
இதன் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பாட்டு ஆசிரியை முனீஸ்வரி, பரத ஆசிரியர் பாலாஜி, ஓவிய ஆசிரியை அனந்த முத்துமாரி, சிலம்பம் ஆசிரியர் தனசேகரன் ஆகியோர்பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிகளை ஜவஹர் சிறுவர் மன்ற மாவட்ட திட்ட அலுலர்லோகசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார்.

