/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம்; நாளை குதிரை வாகன சேவை

ADDED : மே 20, 2024 11:08 PM

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தீர்த்தவாரி மண்டபம் எழுந்தருளினார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வசந்த உற்ஸவ விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. அப்போது பெருமாள், தாயாருடன் ஏகாந்த சேவையில் தீர்த்தவாரி மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அருள் பாலித்தார்.
மேலும் பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர். நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.