ADDED : மே 17, 2024 07:15 AM

அ நிறம் | அளவு
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் இரவு சுவாமி ஊர்வலம் நடக்கிறது. நேற்று முன்தினம் ஆதிரெத்தினேஸ்வரர்பிரியாவிடையுடன் பூத வாகனத்திலும், சிநேகவல்லி அம்மன் காமதேனு வாகனத்திலும் வீதி உலா சென்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
