/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழ்நாடு கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாவட்ட மாநாடு
/
தமிழ்நாடு கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாவட்ட மாநாடு
ADDED : மார் 09, 2025 05:04 AM

பரமக்குடி : பரமக்குடியில் தமிழ்நாடு கோயில் பூஜாரிகள்நலச் சங்கத்தின் 16வது மாவட்ட மாநாடு நடந்தது.
தென்மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலையத் துறையின் பூஜாரிகள் ஓய்வூதிய தேர்வுக் குழு உறுப்பினர் வாசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில பொருளாளர் சுந்தரம், பொதுச்செயலாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட பொருளாளர் கூரிஅய்யா பேசினர்.
பூஜாரிகள் நல வாரியம் தொடர்ந்து செயல்படுவதுடன், ஒரு கால பூஜை செய்யும் பூஜாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நலவாரிய பூஜாரி உறுப்பினர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்க வேண்டும். கோயில் இடங்களில் அரசு கட்டடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது. கோயில் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் சந்தனகுமார் நன்றி கூறினார்.