/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்ப விளக்கம்
/
நயினார்கோவிலில் மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்ப விளக்கம்
நயினார்கோவிலில் மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்ப விளக்கம்
நயினார்கோவிலில் மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்ப விளக்கம்
ADDED : ஜூன் 01, 2024 04:14 AM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தில் விவசாய முறைகள் மற்றும்அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் இருந்து அறிந்து கூறி வருகின்றனர்.
இதன்படி வேளாண் கல்லுாரி மாணவி இந்துஜா, இளம் விவசாயிசதீஷ் உள்ளிட்டோர் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மண்புழு உரம் தயாரிக்க ஒரு மீட்டர் அகலத்திற்கு மிகாமல் மற்றும் இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம்.
அரையடி ஆழத்திற்கு குழி வெட்டப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணல், பண்ணை கழிவுகளை நிரப்ப வேண்டும். மேலும் நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி மண்புழுக்களை விட வேண்டும்.சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்.
பண்ணையில் சேரும் கழிவுகளை அடுத்தடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம். பயறு, நெல், கரும்பு, மிளகாய், சூரியகாந்தி, மக்காச்சோளம் என ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட அளவில் உரங்களை விட வேண்டும் என்றனர்.