
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, - திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள கால பைவரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. கால பைரவருக்கு சந்தனம், மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழுவினர் செய்திருந்தனர்.