/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் விழா: வடமாடு மஞ்சுவிரட்டு
/
கோயில் விழா: வடமாடு மஞ்சுவிரட்டு
ADDED : ஜூன் 01, 2024 04:23 AM

கமுதி: கமுதி அருகே வ.மூலக்கரைப்பட்டி கிராமத்தில் செல்வ விநாயகர், சுந்தரராஜ பெருமாள், குங்குமகாளியம்மன், நாககன்னி அம்மன் கோயில் 18ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 11வது குருபூஜை விழா நடந்தது.
விழாவில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். கிராம மக்கள் பால்குடம், பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உட்பட மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமத்தின் சார்பில் குத்துவிளக்கு, பாத்திரம், கோப்பை, ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஒரு சில வீரர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது.
போட்டியை வ.மூலக்கரைப்பட்டி கிராம மக்கள்நடத்தினர். கமுதி சுற்றியுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.