
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் விநாயகர், அரியநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி தொடர்ந்து யாகசாலை பூஜைகள், தீபாரதனை நடந்தது.
விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கடம் புறப்பாட்டுக்கு பின் கோபுர கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. அரியநாச்சியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்து, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.