/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் நடக்கும் சந்தனக்கூடு விழா; கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊராட்சி அடிப்படை வசதிகள் கேள்விக்குறி

ADDED : மே 22, 2024 07:56 AM
கீழக்கரை : ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு மே 9 முதல் ஜூன் 8 வரை சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஏர்வாடி ஊராட்சி சார்பில் அதற்குரிய இடங்களில் குத்தகை வசூல் செய்யப்படுகிறது.
ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் விட்டு வெளியூர் வாகனங்கள் வந்து செல்வதற்கு கட்டண விபரங்களை நிர்ணயித்து அவற்றை விவரப் பலகையாக ஒட்டாமல் வைத்துள்ளனர். இதனால் கட்டணம் வசூலிப்பவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
எனவே டெண்டரில் குறிப்பிட்டவாறு வாகன ஓட்டிகளிடம் அதற்கான தொகையை தெரியப்படுத்தும் வகையில் போர்டு வைக்க வேண்டும். டூவீலருக்கு ரூ.30, ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.50, தனியார் டூரிஸ்ட் பஸ்களுக்கு ரூ. 100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
ரூ.10 லட்சத்து 40 ஆயிரத்திற்கு டெண்டர் விடப்பட்டு அதற்கான தொகை ஊராட்சியில் உள்ளது. ஆனால் வருமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் உள்ளதாக யாத்ரீகர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏர்வாடிக்கு வந்திருந்த யாத்ரீகர்கள் கூறியதாவது: பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை வளாகங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கப்படவில்லை. தேவைப்படும் இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கவில்லை. விழாக் காலங்களில் கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். குப்பையை உடனுக்குடன் அள்ள வேண்டும். அவற்றை முறையாக செய்வது இல்லை.
எனவே லாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்றனர்.