/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்
ADDED : செப் 09, 2024 05:43 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை (செப்., 10) முதல் செப்., 24 வரை நடக்கிறது.
சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடக்கும் போட்டிகள்: செப்., 10 ல் கைப்பந்து, ஹாக்கி, நீச்சல் (இருபாலர்). கூடைப்பந்து, கையுந்து பந்து ஆண்கள் மட்டும். செப்., 12ல் கேரம் (இருபாலர்). செப்., 13ல் இறகுப்பந்து ஆண், தடகளம் பெண்கள்.
செப்., 14ல் தடகளம் ஆண்கள், சிலம்பம், மேசைப்பந்து (இருபாலர்). வாணி வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் போட்டிகள்: செப்., 10ல் கூடைப்பந்து, கையுந்துபந்து பெண்.
செப்., 16 ல் கால்பந்து பெண். தேவிபட்டினம் பெண்குளம் ஷிபான் நுார் குளோபல் அகாடமியில் செப்., 16ல் கோ-கோ ஆண், பெண். ராமநாதபுரம் நபிசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செப்., 16ல் கால்பந்து ஆண். ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செப்., 10ல் கையுந்துபந்து பெண், செப்., 12ல் சதுரங்கம் ஆண், பெண். செப்., 13ல் கபடி ஆண், செப்.,14ல் கபடி பெண். ராமநாதபுரம் பேராவூர் செய்யது அம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில் செப்., 13, 14,15ல் கிரிக்கெட் (இருபாலர்).
கல்லுாரி மாணவர்கள்
சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடக்கும் போட்டிகள்: செப்., 10ல் ஹாக்கி, நீச்சல், இறகுப்பந்து. செப்., 13 ல் தடகளம் பெண். செப்., 14 ல் தடகளம் ஆண், மேசைப்பந்து ஆண், பெண். செப்., 19ல் கூடைப்பந்து, கையுந்துபந்து, சிலம்பம், கபடி, கால்பந்து ஆண், பெண்.
செப்., 22ல் கைப்பந்து, கேரம், சதுரங்கம், ஆண், பெண். ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செப்., 20 முதல் 24 வரை கிரிக்கெட் ஆண், பெண். மாற்றுத் திறனாளிகளுக்கு செப்., 16ல், அரசுப்பணியாளர்களுக்கு செப்., 20, 21ல் போட்டிகள் நடக்கும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அடையாள அட்டை, ஆதார் கார்டு. அரசுப் பணியாளர்கள் அலுவலக அடையாள அட்டை. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார்கார்டு.
பொதுப்பிரிவுக்கு இருப்பிட சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு.
மேற்கண்ட பிரிவில் உள்ள அனைவரும் ஒரிஜினல் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 7:00 மணிக்கு சீருடை, விளையாட்டு உபகரணங்களுடன், விளையாட்டு காலனிகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகதத்தை நேரிலோ, அல்லது தொலை பேசி 04567- 230 238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.