/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
* மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சியில் அவலம் கழிவு நீரான குடிநீர் கிணறுகள், குடிநீர் தொட்டிகளில் கலக்கும் பாதாள சாக்கடை
/
* மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சியில் அவலம் கழிவு நீரான குடிநீர் கிணறுகள், குடிநீர் தொட்டிகளில் கலக்கும் பாதாள சாக்கடை
* மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சியில் அவலம் கழிவு நீரான குடிநீர் கிணறுகள், குடிநீர் தொட்டிகளில் கலக்கும் பாதாள சாக்கடை
* மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சியில் அவலம் கழிவு நீரான குடிநீர் கிணறுகள், குடிநீர் தொட்டிகளில் கலக்கும் பாதாள சாக்கடை
ADDED : டிச 09, 2025 05:43 AM

ராமநாதபுரம்: - : மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வியடைந்து பல ஆண்டுகளாகிய நிலையில் நகர் முழுவதும் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை குடிநீருடன் கலந்து தொட்டிகளில் விநியோகிக்கப்படுகிறது. கிணறுகளும் சாக்கடையாக மாறி வருகிறது. கிணறுகள், நீர்தேக்க தொட்டிகளில் கழிவுநீர் கலப்பதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 90 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011ம் ஆண்டில் திருச்சி நங்கநல்லுார் காவிரி ஆற்று படுகையில் இருந்து 200 கி.மீ., குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. காவிரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல்நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு செல்லும் காவிரி குடிநீர் குழாய்களை முறையாக பராமரிக்காததால் மழைக்காலத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது. ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் பாதாள சாக்கடை சரிவர பராமரிப்பு இல்லாமல் ரோடு, வீதிகளில் கழிவுநீர் அடிக்கடி ஓடுகிறது. தினமலர் நகர், இந்திராநகர், அக்ரஹாரம் தெரு, நகர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வெளியேறி குடிநீருடன் கலக்கிறது.
அதேபோல் பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகர், பாரதிநகர், நேருநகர் உள்ளிட்ட பகுதியில் தற்போது வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாததால் கழிவுநீர் நிரம்பி ரோட்டில் தேங்குகிறது. கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சாக்கடையாக ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அவ்வாறு தேங்கிய கழிவுநீர் வீடுகளில் உள்ள கிணறு, நீர்த்தேக்கத் தொட்டிகளில் கலக்கின்றன. இதனால் மக்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக நகராட்சியில் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தெருக்களில் மழை நீருடன் தேங்கிய கழிவுநீரை அகற்றி குழாய்களை சீரமைக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர தீர்வு கண்டறிந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். -------

