/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுச் சாவடியை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்
/
ஓட்டுச் சாவடியை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்
ADDED : மார் 26, 2024 11:47 PM

ஆர்.எஸ்.மங்கலம்: தமிழகத்தில் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 87 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வசதிகள் குறித்தும், ஓட்டுச்சாவடியில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிச்செல்வி ஆய்வு செய்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஓட்டுச்சாவடியின் கூரைகள் சேதமடைந்துள்ளதால் உடனடியாக அதை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதியவர்கள் ஓட்டளிப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை தாசில்தார் சிராஜுதீன் உட்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

