/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்பிடி தடைக்காலங்களில் படகுகளை பழுதுநீக்க அரசு நிதி வழங்க வேண்டும்

ADDED : ஜூன் 17, 2024 12:15 AM
ராமநாதபுரம் : மீன் பிடி தடைக்காலங்களில் படகுகளை பழுது நீக்கம் செய்ய போதுமான நிதியினைமீனவர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
மீன் பிடி தடைக்காலம் ஆண்டு தோறும் ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இது போன்ற தடைக்காலங்களில் படகுகளை மீனவர்கள் பழுது நீக்கம் செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இதில் மீன் பிடி தொழில் முன்பு போல் போதிய வருமானம் இல்லாததால் மீனவர்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக படகுகளில் பழுது நீக்கம், பராமரிப்பு பணிகள் முழுமையாக செய்ய முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
சின்னதம்பி, பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்: ஆண்டு தோறும் மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன.
தொழில் இல்லாமல் 60 நாட்கள் மீனவர்கள் இருக்கும் நிலையில் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகளையும் செய்வதால் லட்சக்கணக்கில் பணம் செலவிடும் நிலை உள்ளது.
படகு பராமரிப்பு பணிக்கு அரசு மீனர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், என்றார்.