/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடம் பன்றி வளர்க்கும் இடமாக மாறியது
/
சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடம் பன்றி வளர்க்கும் இடமாக மாறியது
சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடம் பன்றி வளர்க்கும் இடமாக மாறியது
சாயல்குடியில் பஸ் டிப்போவிற்கு ஒதுக்கிய இடம் பன்றி வளர்க்கும் இடமாக மாறியது
ADDED : மே 17, 2024 07:16 AM

சாயல்குடி :சாயல்குடியில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டி 2009ல் அப்போதைய தி.மு.க., அரசால் ஒதுக்கப்பட்ட இடம் தற்போது பன்றிகள் வளர்க்கும் இடமாக மாறி வருகிறது.இங்கு பணிமனை அமைக்க ஐந்து அமைச்சர்கள் விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே 2.5 ஏக்கர் இடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு சுற்றிலும் கம்பி வேலி அடைக்கப்பட்டுள்ளது.2021ம் ஆண்டு அக்., மாதத்தில் அவ்விடத்தில் சாயல்குடி போக்குவரத்து பணிமனை அமைப்பதற்கான இடத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலத்தின் சார்பில் இவ்விடம் போக்குவரத்து பணிமனைக்கான இடம் என விளம்பரப்பலகைவைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி அவ்விடத்தில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. மறைவான இடத்தை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ளோர் பன்றிகளை வளர்த்து வருவதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடாக உள்ளது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அதிக எண்ணிக்கையில் பன்றிகள் வளர்க்கும் இடமாக உள்ளதால் திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே சாயல்குடியை மையப்படுத்தி போக்குவரத்து பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடியைச் சேர்ந்த வணிகர் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
சாயல்குடியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள்உள்ளன. முதுகுளத்துாரில் போக்குவரத்து பணிமனை உள்ள நிலையில் சாயல்குடியில்போக்குவரத்து பணிமனை அமைந்தால் அரசு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடைப்பதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் கிராமங்களுக்கு பஸ் வசதி எளிதாக கிடைக்கும்.
இதனை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக பன்றிகளை வளர்க்கின்றனர். அவ்விடத்தில் கோழி கழிவுகளை கொட்டி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவ்விடத்தை பார்வையிட்டு சீமை கருவேல மரங்கள் மற்றும் அப்பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.நிழல் தரும் மரங்களை நட வேண்டும் என்றார்.

