/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சவடுமண் அள்ளப்படும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
/
சவடுமண் அள்ளப்படும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
சவடுமண் அள்ளப்படும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
சவடுமண் அள்ளப்படும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
ADDED : ஜூலை 28, 2024 04:21 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆழமாக சவடு மண் அள்ளப்படுவதை தடுக்க அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தாலுகா அலுவலகம் அனுமதி பெற்று சவடுமண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் கொட்டப்பட்டு சமன் செய்யப்படுவதற்கு அரசாணை வழங்கப்பட்டது.
இதையடுத்து முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் உரிய பட்டா வழங்கி மனு செய்து பயனாளிகளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சவடுமண் அள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே போன்று சவடுமண் அள்ளப்பட்டது.
அப்போது முதுகுளத்துார் பகுதியில் ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் சவுடு மண் அள்ளப்பட்டதால் பள்ளங்கள் ஏற்பட்டது. மழைக்காலத்தில் பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
டிச.,ல் முதுகுளத்துார் பெரிய கண்மாயில் பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கிய நிலையில் 9ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இதே போன்ற நிலை மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக தற்போது சவடுமண் அள்ளப்படும் இடங்களில் அளவுக்கு அதிகமாக தோண்டப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.