/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி
ADDED : மார் 10, 2025 04:39 AM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டாரத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில், விவசாயிகள் நில உடைமை பதிவுகள் சரிபார்த்து தனித்துவ அடையாள அட்டை எண் வழங்கும் பணி நடக்கிறது.
விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பயன்களும் பெரும் வகையில், ஒரே தளத்தின் கீழ் தனித்துவ அடையாள அட்டை எண் வழங்கப்படுகிறது. நயினார்கோவில் பகுதியில் 4500 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விடுபட்டவர்கள் ஆதார் அட்டை நகல், நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் எடுத்து சென்று தனித்துவ அடையாள எண்ணை பெறலாம்.
விவசாயிகள் பொது சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யலாம் நயினார்கோவில் வேளாண் உதவி இயக்குநர் பானுப்பிரகாஷ் தெரிவித்தார்.