/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிடாரியேந்தல் கண்மாய் சேதமடைந்த மடைகளால் வீணாகும் தண்ணீர் காணாமல் போனது வரத்து கால்வாய்

ADDED : மார் 08, 2025 04:00 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே பிடாரியேந்தல் கண்மாய் மடைகள் சேதமடைந்த நிலையில் வரத்து கால்வாயும் காணாமல் போனதால் விவசாயிகள் தண்ணீருக்கு ஏங்கும் நிலை உள்ளது.
பரமக்குடி ஊராட்சி பிடாரியேந்தல் கண்மாயை நம்பி பிடாரியேந்தல், கஞ்சியேந்தல், புளியங்குளம் கிராம விவசாயிகள் உள்ளனர். இதன்படி 50 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பல ஆண்டுகளாக கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் காணாமல் போனது.
மேலும் கண்மாயில் மழை நீர் தேங்கும் சூழலில் அதனை தடுத்து வழியின்றி இருக்கிறது. தொடர்ந்து இங்குள்ள இரண்டு மடைகளும் ஒட்டுமொத்தமாக உடைந்துள்ளது.
இதனால் தண்ணீரை மடைகள் வழியாக பயன்படுத்த முடியாமல் மோட்டார் வைத்து வயலுக்கு பாய்ச்சும் நிலை உள்ளது. இதற்காக விவசாயிகள் தேவையற்ற செலவுகளை சந்திக்கின்றனர்.
மேலும் வறட்சி காலங்களில் எப்போதும் தண்ணீர் தேங்காத நிலை உள்ளதால் மக்களின் பயன்பாட்டிற்கும் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து கண்மாயை புதுப்பிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., விளத்துார் கிளை சார்பில் செயலாளர் பெரியண்ணன் தலைமையில் வட்டார செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கையெழுத்து இயக்கத்தை நடத்துகின்றனர்.
எனவே ஒன்றிய மற்றும்பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரத்து கால்வாய் மற்றும் கண்மாய் மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.