/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வளர்ப்பு பூனைகளுக்கு மருந்தில்லை
/
வளர்ப்பு பூனைகளுக்கு மருந்தில்லை
ADDED : ஆக 09, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை நகரில் வீடுகளில் ஏராளமானோர் 500க்கும் அதிகமான பூனைகளை வளர்க்கின்றனர்.
செல்ல வளர்ப்பு பிராணியான பூனைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவற்றிற்கு கீழக்கரை கால்நடை மருத்துவமனையில் உரிய மருந்துகள் இல்லாததால் பூனை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர்.
கீழக்கரை அப்துல் ரகுமான் கூறுகையில், பூனைகளுக்கான மருந்து மாத்திரைகள் கீழக்கரை அரசு கால்நடை மருத்துவமனையில் இருப்பு இல்லை. எனவே கால்நடைத்துறை அலுவலர்கள்வளர்ப்பு பிராணிகளின் நலன் கருதி பூனைகளுக்கு உரிய மருந்து, மாத்திரை தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.