/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை
/
தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை
தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை
தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை
ADDED : ஜூலை 28, 2024 11:49 PM

திருவாடானை : திருவாடானை அருகே தினைக்காத்தான்வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாதததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
திருவாடானை அருகே தினைக்காத்தான்வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நெய்வயல், காட்டியேனேந்தல், இலங்குன்றம், விழிமாத்துார், தினைகாத்தான்வயல், கீழக்கோட்டை, சீந்திவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 130 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளியில் சுற்றுச்சுவர் வசதியில்லாததால் திறந்த வெளியாக உள்ளது. விஷப்பூச்சிகள், கால்நடைகள் உலா வருகின்றன.
பலத்த காற்று வீசும் போது பறந்து வரும் மண் துாசியாலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இப்பள்ளி கிராமத்தை விட்டு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால் இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் மது அருந்தும் பாராகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளது.
ஆகவே இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.