/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை: 13 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
/
திருவாடானை: 13 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : மே 04, 2024 04:58 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 6 உயர்நிலை, 7 மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதாமல் விடுபட்டவர்களை கண்டறியவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை துவக்கவும் கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நேற்று உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை சிறப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. திருவாடானை தாலுகாவில் 6 உயர்நிலை, 7 மேல்நிலைப் பள்ளிகளில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஒவ்வொரு பிரிவிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் அவர்களின் தற்போதைய நிலை, அவர்களுக்கு மீண்டும் வகுப்பு நடத்தி, பயிற்சி அளித்து துணைத் தேர்வு எழுத தயார்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளியிலும் 20 மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.