/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண் உட்பட மூவர் கைது
/
கள்ளப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண் உட்பட மூவர் கைது
கள்ளப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண் உட்பட மூவர் கைது
கள்ளப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 18, 2024 08:25 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற அந்நாட்டு பெண், அவருக்கு உதவிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு நின்ற பெண் ஒருவரை பிடித்து துறைமுகம் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். அவர் இலங்கை முல்லைத்தீவைச் சேர்ந்த வன்னியசிங்கம் மனைவி விஜிதா 45, என தெரிய வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக 6 மாதம் விசாவில் 2023 டிச.,9ல் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சிகிச்சை முடிந்து இலங்கை திரும்பி செல்லாமல் சென்னை, மதுரையில் உள்ள இலங்கையை சேர்ந்த உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் விஜிதா கள்ளப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டு, ஏஜென்டுகளான ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஜேசுராஜா 35, அவரது மைத்துனர் அருளானந்தம் 39, ஆகியோரிடம் படகு கூலி ரூ.50 ஆயிரம் பேரமும் பேசியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு இலங்கை செல்ல ராமேஸ்வரம் வந்த போது போலீசாரிடம் விஜிதா சிக்கியுள்ளார். அவரை பாஸ்போர்ட் வழக்கில் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் படகு ஏஜென்டுகள் அருளானந்தம் 39, 17 வயதான அவரது மகனை போலீசார் கைது செய்தனர். தப்பிய ஜேசுராஜாவை தேடி வருகின்றனர்.