/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் ஏ.டி.எம்., செயல்படவில்லை
/
திருவெற்றியூர் ஏ.டி.எம்., செயல்படவில்லை
ADDED : ஏப் 11, 2024 06:14 AM
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் ஏ.டி.எம்., மையம் செயல்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் ஏ.டி.எம்., மையம் அமைக்கபட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஏ.டி.எம்., செயல்படாமல் உள்ளது.
குளத்துார், மஞ்சூர், ஏழுர், அரும்பூர், கட்டுகுடி, புல்லுகுடி, சூரம்புளி, கொட்டகுடி, கள்ளிக்குடி, கடுக்களூர், முகிழ்த்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இங்கு பணம் எடுத்துச் செல்வார்கள்.
இது தவிர வெளி மாவட்டங்களிலிருந்து திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் அவசரத் தேவைக்கு பணம் எடுப்பார்கள். ஒரு மாதமாக செயல்படாததால் இப்பகுதி மக்கள் திருவாடானை, தொண்டிக்கு செல்கின்றனர். ஏ.டி.எம்., செயல்பட வங்கி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

