/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் நெரிசல் தவிர்க்க 17 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம்: அரிச்சல்முனை செல்ல வாகனங்களுக்கு தடை

UPDATED : பிப் 28, 2025 06:08 AM
ADDED : பிப் 28, 2025 01:20 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனையில், வாகன நெரிசலை தவிர்க்க, 17 ஏக்கரில் பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்க, தமிழக சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில், 1964ல் ஏற்பட்ட புயலுக்குப் பின், ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த பேரிடருக்குப் பின், 53 ஆண்டுகள் கழித்து, மத்திய அரசு தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைத்து, 2017ல் பிரதமர் மோடி சாலையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அன்று முதல் இன்று வரை தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணியர் தனுஷ்கோடியில், புயல் மழையில் இடிந்த கட்டடங்கள், அரிச்சல் முனையில் உள்ள அழகிய கடற்கரையை கண்டு ரசிக்கின்றனர்.
அரிச்சல் முனையில் வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத நிலையில், குறுகிய பகுதியில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
இதைத் தவிர்க்க, தமிழக சுற்றுலாத்துறை சார்பில் தனுஷ்கோடியில், 17 ஏக்கரில் பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இங்கு வாகனங்கள் பார்க்கிங், இயற்கை எரிபொருள் பம்ப், சுற்றுலா ஹெலிகாப்டர் நிறுத்தும் தளம், மளிகை கடைகள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.
இதற்கான நிதி கிடைத்ததும், இந்த பார்க்கிங் பிளாசா கட்டுமானப் பணிகள் துவங்கும்.
இப்பணிகள் முடிந்ததும், அரிச்சல் முனைக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல் முனை வரை சுற்றுலாத்துறை சார்பில் மினி பஸ் இயக்கப்படும் என, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.