ADDED : மார் 06, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி பஜார் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கமுதி எஸ்.ஐ., கவுதம் உட்பட தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கமுதி செட்டியார் பஜாரில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது 247 பாக்கெட் புகையிலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பதுக்கி வைத்திருந்த மளிகை கடை உரிமையாளர் முத்துமாரி 62, கைது செய்யப்பட்டார்.