/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை குரூப்-2, 2--ஏ தேர்வு 47 மையங்களில் முன்னேற்பாடு
/
நாளை குரூப்-2, 2--ஏ தேர்வு 47 மையங்களில் முன்னேற்பாடு
நாளை குரூப்-2, 2--ஏ தேர்வு 47 மையங்களில் முன்னேற்பாடு
நாளை குரூப்-2, 2--ஏ தேர்வு 47 மையங்களில் முன்னேற்பாடு
ADDED : செப் 13, 2024 05:01 AM
ரமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(செப்.14)டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2-ஏ முதல் நிலை தேர்வில் 15 ஆயிரத்து 656 பேர் பங்கேற்க உள்ளனர். 47 மையங்களில் முன்னேற்பாடுகள் நடக்கிறது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2,2-ஏ தொகுதி முதல் நிலைத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2,2-ஏ குடிமைப் பணிகளுக்கு நாளை முதல் நிலைத் தேர்வு 47 மையங்களில் நடக்கிறது. 15,657 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையங்களில் வீடியோ கேமராவில் கண்காணிக்க வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். குடிநீர், தடையின்றி மின்சாரம் வழங்குதல் மற்றும் போதிய பஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.