/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்திணை பூங்காவில் உலா வரும் வாத்துக்கள் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

ADDED : ஏப் 21, 2024 04:06 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஐந்திணை பூங்காவில் கோடை விடுமுறையை முன்னிட்டு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.
பத்து ஏக்கரில் அமைந்துள்ள ஐந்திணை பூங்காவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள தடாகத்தில் ஐந்து வெண்மை நிற வாத்துக்கள் நீந்தி மகிழ்வதை ஆர்வமுடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூறியதாவது:
பசுமை போர்த்தியது போன்று காணப்படும் ஐந்திணை பூங்காவில் கோடையின் வெப்பத்தை சமாளிக்க பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பெறப்படும் தண்ணீர் இங்குள்ள தாவரங்கள், குரோட்டன்ஸ் செடிகள், மரங்கள் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தற்போது அழகிய வாத்துக்கள் பூங்காக்களில் சுற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே கூடுதல் எண்ணிக்கையில் வளர்ப்பு பிராணிகளான வாத்துக்கள் வளர்க்க வேண்டும்.
இதன் மூலம் பசுமைகளுக்கு மத்தியில் மனதிற்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர்.