/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரோட்டோரம் சீமைக்கருவேலம் வளர்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதி
/
பாம்பன் ரோட்டோரம் சீமைக்கருவேலம் வளர்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதி
பாம்பன் ரோட்டோரம் சீமைக்கருவேலம் வளர்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதி
பாம்பன் ரோட்டோரம் சீமைக்கருவேலம் வளர்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதி
ADDED : ஏப் 22, 2024 07:04 AM

ராமேஸ்வரம், : பாம்பன் குந்துகால் ரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சுற்றுப் பயணம் முடித்து கப்பலில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார். இதன் நினைவாக இங்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்துள்ளனர்.
மேலும் மன்னார் வளைகுடா பாதுகாப்பு அமைப்பு சார்பில் அருங்காட்சியகக் கூடம் மற்றும் வனத்துறை சார்பில் சுற்றுலாப் படகு சவாரி மையம் உள்ளது.
இதனால் இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
பாம்பனில் இருந்து குந்துகாலுக்கு 4 கி.மீ.,க்கு செல்லும் தார் ரோட்டோரம் பல இடங்களில் இரு புறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள், அரசு பஸ்கள் சேதமடைகின்றன.
இதனால் சுற்றுலாப் பயணிகள் வேதனை அடைகின்றனர்.
எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.