ADDED : ஆக 23, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அரசு பெர்மிட் பெற்ற 540 ஆட்டோக்கள் ஓடி வந்த நிலையில், தற்போது 1200 ஆட்டோக்கள் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கின்றனர்.
மேலும் 100க்கு மேலான டூவீலர்கள் வாடகைக்கு ஓடுவதால் வாடகை வாகன தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இதனை கண்டித்தும், பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சி.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் என்.பி.செந்தில்,கருணாமூர்த்தி பங்கேற்றனர்.