/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ரோடு ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 14, 2024 10:31 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் அரண்மனை ரோடு கோட்டை விநாயகர் கோயில் அருகே தொடரும் ஆக்கிரமிப்புகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம் ரோடு, வண்டிக்காரத் தெருவில் நகராட்சி, தாலுகா, பத்திரப்பதிவு ஆகிய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளன.
மேலும் பஜார் பகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வாகனங்கள், மக்கள் அதிகளவில் வருகின்றனர்.
பொது மக்கள் பயன் படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நடை பாதை ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன.
குறிப்பாக அரண்மனை ரோடு, தலைமை தபால் நிலையம் ரோடு, வண்டிக்காரத் தெருவில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.