/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
/
தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 01, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். இல்லம் தேடி கல்வி திட்டம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கமுதி வட்டாரத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 69 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். முதல் பருவத்துக்கான புத்தகம் வழங்கப்பட்டது.
கருத்தாளர் ஜெகநாதன், ஆசிரியர் பொன்மலர் உட்பட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.