/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி
/
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி
ADDED : செப் 14, 2024 11:50 PM

பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.
பரமக்குடி தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் மயில் வாகனம், மாவட்ட குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, தி.மு.க., பழனிகுமார், மகிளா காங்., லட்சுமி, சி.பி.ஐ., பெருமாள், ஆம் ஆத்மி முத்துக்குமார், தமிழ் புலிகள் ராஜா, தமிழர் தேசிய முன்னணி வக்கீல் பசுமலை, ம.தி.மு.க., பிச்சைமணி, ஏ.ஐ.டி.யு.சி., ராஜன், சி.பி.ஐ., சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., முரளி, முன்னாள் சேர்மன் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி: இளையான்குடியில் மார்க்., கம்யூ., பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவை தொடர்ந்து இரங்கல் கூட்டம் தாலுகா செயலாளர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, ஜெயந்தி, டாஸ்மாக்சங்க மாநில துணை பொதுச்செயலாளர்,முருகன்,ம.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், வி.சி.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்,தியாகி இமானுவேல் பேரவை மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
* தேவகோட்டை மார்க்சிஸ்ட் சார்பில் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு இரங்கல்கூட்டம் மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்பசாமி, பேராசிரியர் பழனிராகுலதாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு காமராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழ் அரிமா, காங்கிரஸ் நகர தலைவர் சஞ்சய்,சி.பி.ஐ., எம்.எல்., நாராயணன், தி.க. மணிவண்ணன், மார்க்சிஸ்ட் மாணிக்கம், அஜீஸ்கான் உட்பட பலர் பேசினர்.