/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் பூட்டி வைக்கப்பட்ட கட்டணக் கழிப்பறையால் அவதி
/
பஸ் ஸ்டாண்டில் பூட்டி வைக்கப்பட்ட கட்டணக் கழிப்பறையால் அவதி
பஸ் ஸ்டாண்டில் பூட்டி வைக்கப்பட்ட கட்டணக் கழிப்பறையால் அவதி
பஸ் ஸ்டாண்டில் பூட்டி வைக்கப்பட்ட கட்டணக் கழிப்பறையால் அவதி
ADDED : மார் 06, 2025 03:40 AM

கீழக்கரை : கீழக்கரை நகருக்கு நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள கட்டண கழிப்பறை வளாகம் இரண்டு மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கழிப்பறை வசதியின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர். வெளியூரை சேர்ந்த பயணிகள் கூறியதாவது:
பொதுவாக நகர் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி கழிப்பறை வளாகம் அவசியத் தேவையாக உள்ளது. அவசரத்திற்கு கூட ஒதுங்க முடியாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் கடற்கரை பகுதிக்கு சென்று இயற்கை உபாதை கழிக்கின்றனர்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த கட்டண கழிப்பறை பூட்டப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது :
கழிப்பறை வளாகத்தில் உள்ள தளவாடப் பொருட்கள் சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிகளுக்காக பூட்டப்பட்டுள்ளது. விரைவில் புதிய பணிகள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்றனர்.