/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி
/
சர்வாதிகார தேசமாக மாற்ற முயற்சி
ADDED : ஏப் 06, 2024 03:57 AM
பரமக்குடி : பரமக்குடியில் இண்டியா கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: ஒவ்வொருவரின் தலை மீதும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளார் மோடி. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான தேர்தல் இது. மக்களிடமிருந்து எடுப்பவர் மோடி, கொடுப்பவர் ராகுல் என்றார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லா கட்சிகளையும் அபகரிக்க நினைப்பவர் மோடி. மாநில அதிகாரங்களை பறிக்க வேண்டும்.
தமிழை கொச்சைப்படுத்தி சமஸ்கிருதத்தை வளர்க்கும் முயற்சியில் மோடி உள்ளார். அதற்கு ஊதுகுழலாக அண்ணாமலை உள்ளார். இந்த தேசத்தை சர்வாதிகார தேசமாக மாற்றும் திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்றார்.

