/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிப்பர் லாரி டூ வீலரில் மோதி இருவர் பலி
/
டிப்பர் லாரி டூ வீலரில் மோதி இருவர் பலி
ADDED : மே 03, 2024 02:35 AM

பெருநாழி:-ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே டிப்பர் லாரியும் டூவீலரும் நேருக்கு நேர் மோதியதில் இரு வாலிபர்கள் பலியாகினர்.
சாயல்குடி - அருப்புக்கோட்டை ரோட்டில் பெருநாழி துத்திநத்தம் அருகே நேற்று மாலை 4:30 மணிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி சென்றது. எதிரில் வந்த டூவீலரில் நேருக்கு நேர் மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த மறக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சதீஷ்குமார் 33, பின்னால் இருந்த நண்பர் சின்ன உடப்பங்குளம் அழகுமலை மகன் பழனி முருகன் 28, ஆகியோர் துாக்கி வீசப்பட்டு சம்பவயிடத்தில் பலியாகினர்(2 பேரும் ெஹல்மெட் அணியவில்லை). லாரி டிரைவர் கே.நடுங்குளத்தைச் சேர்ந்த லிங்கத்தை 40, போலீசார் கைது செய்தனர்.