ADDED : செப் 11, 2024 01:43 AM

சிக்கல்:ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே டூவீலர்கள் மோதிக்கொண்டதில் பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் பலியாயினர்.
ஏர்வாடியை சேர்ந்த அக்கீம் சுல்தான் மகன் அப்துல் ஹலீம்,17. பிளஸ் 2 படித்தார்.
இவர் பள்ளி நண்பரான சின்ன ஏர்வாடி களஞ்சியம் மகன் ஹரித்ர ஷரீத்துடன் 17, டூவீலரில் நேற்று காலை 7:00 மணிக்கு ஏர்வாடியிலிருந்து சிக்கல் சென்றார்.அப்துல் ஹலீம் டூவீலரை ஓட்டினார்.
அப்போது பனையடியேந்தல் முனியசாமி மகன் ஜெயபாலன் 28, டூவீலரில் சிக்கலில் இருந்து அவரது ஊருக்கு சென்றார். இதம்பாடல் அப்துல்ஹலீம் டிராக்டரை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரில் வந்த ஜெயபாலன் டூவீலரில் நேருக்கு நேர் மோதினார். இதில் ஜெயபாலன், அப்துல் ஹலீம் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
காயமடைந்த ஹரித்ர ஷரீத் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.