ADDED : ஜூன் 16, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே கீழராமநதி முனியசாமி மகன் முகேஷ் கண்ணன் 26. உறவினர் திருச்சிலுவையாபுரம் செல்வம் 29. இருவரும் டூவீலரில் கமுதி சென்றனர்.
அப்போது சிங்கபுலியாம்பட்டி சுற்றுவட்ட ரோடு அருகே சென்ற போது எதிரே கே.நெடுங்குளம் ராஜீவ்காந்தி 28, ஓட்டி வந்த டூவீலருடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் முகேஷ்கண்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராஜீவ்காந்தி, செல்வம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.