ADDED : ஜூலை 27, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: திருப்புல்லாணி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் 23. இவர் ராமநாதபுரத்தில் உள்ள சோலார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு முன் டூவீலரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். காலையில் பார்க்கும் போது வீட்டின் முன்பிருந்த டூவீலர் திருடு போனது.
இதுகுறித்து திருப்புல்லாணி போலீசில் அளித்த புகாரில் விசாரணையில் திருச்சி தோளூர்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் 51, டூவீலர் திருடியது தெரிய வந்தது. குடிப்பழக்கம் கொண்ட ஜாகிர் உசேன் பல ஊர்களுக்கு சென்று டூவீலர் திருடி கிடைக்கும் விலைக்கு விற்று செலவழித்து வந்துள்ளார். ஜாகிர் உசேனை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர்.
