/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டூவீலர்கள், அலைபேசிகள் திருடும் கும்பல்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டூவீலர்கள், அலைபேசிகள் திருடும் கும்பல்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டூவீலர்கள், அலைபேசிகள் திருடும் கும்பல்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டூவீலர்கள், அலைபேசிகள் திருடும் கும்பல்
ADDED : ஜூன் 27, 2024 04:18 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டூவீலர்கள், அலைபேசிகளை மர்ம கும்பல் திருடி வருவதால் நோயாளிகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமரா செயல்படாததால் திருடர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான வார்டுகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காகஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இரவு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தங்குகின்றனர்.
தற்போது புதிய கட்டடம் திறந்த பிறகு அனைத்து டூவீலர்களையும் புதிய கட்டடம் இருக்கும் பகுதியில் நிறுத்துகின்றனர்.
போதிய பாதுகாப்பு இல்லாததால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் 3 டூவீலர்கள் திருடப்பட்டுள்ளன.
இதே போல் இரவு நேரங்களில் தங்கும் நோயாளிகளின் உதவியாளர்கள் அலைபேசியை திருடி செல்கின்றனர்.
அலைபேசிக்காக போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிப்பதில்லை.
திருடியவர்களை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை தேடினர். கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால்திருட்டு கும்பல் குறித்து தெரியவில்லை.
பிரசவ வார்டுகளில் குழந்தை திருட்டும் நடக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.