/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் அறிவிக்கப்படாத 8 மணி நேர மின்தடையால் அவதி
/
பரமக்குடியில் அறிவிக்கப்படாத 8 மணி நேர மின்தடையால் அவதி
பரமக்குடியில் அறிவிக்கப்படாத 8 மணி நேர மின்தடையால் அவதி
பரமக்குடியில் அறிவிக்கப்படாத 8 மணி நேர மின்தடையால் அவதி
ADDED : ஆக 21, 2024 08:44 AM
பரமக்குடி, : -பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென 8 மணி நேரம் மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
பரமக்குடியில் ஏராளமான வீடுகள் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. தரை தளத்திலிருந்து 10 அடிக்கும் மேல் பால்கனிகளை 2 அடி மற்றும் அதற்கு மேலும் கம்பிகளை பிணைத்து கட்டி விடுகின்றனர்.
அப்போது அந்தந்த தெருக்களில் செல்லும் மின் கம்பிகள் கட்டடத்தை உரசி செல்கிறது. இதனால் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் அவ்வப்போது பலியாகும் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால் 5 அடிக்கும் மேல் கட்டடத்திற்கும், மின் கம்பிக்கும் இடைவெளி இருந்தால் மட்டுமே மீண்டும் சப்ளையை மின்வாரியம் வழங்குகிறது.
இந்நிலையில் அதற்கான மதிப்பீடு தயாரித்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு மின் கம்பிகளை மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அப்போது குறுகிய தெருக்களில் அருகிலுள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், தெருவின் நடுவில் செல்லும் சுவாமி தேர்கள் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் உரசும் நிலை உண்டாகிறது.
இது போன்ற மின் கம்பிகள் மாற்றம் பரமக்குடியில் பல்வேறு தெருக்களில் அன்றாடம் நடக்கிறது.
மின் கம்பிகளை மாற்றும் போது எந்த முன் அறிவிப்பும் செய்வதில்லை. இதனால் தினம் தினம் பல்வேறு பகுதிகளில் 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உட்பட மருத்துவமனைகள், வணிகர்கள், மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே தனி நபரின் தேவைக்கு மின் கம்பிகளை மாற்றும் போது உரிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு அறிவிக்கப்பட்ட மின்தடை நாட்களில் பணிகளை மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.