/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுகாதாரக்கேடான அம்மா உணவகம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுகாதாரக்கேடான அம்மா உணவகம்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுகாதாரக்கேடான அம்மா உணவகம்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுகாதாரக்கேடான அம்மா உணவகம்
ADDED : மே 03, 2024 05:25 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது. இங்கு ஏழை நோயாளிகள்பயன் பெறும் வகையில் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகிறது. உணவகத்திற்கு முன் பதாள சாக்கடை கழிவுகள்செல்லும் மேன்ேஹால் உள்ளது.
இது சேதமடைந்துள்ளதால் அம்மா உணவகத்தில் கொட்டப்படும் கழிவுகளால் கழிவு நீர் செல்லாமல்அடைத்துக்கொள்கிறது. இதன் காரணமாக அம்மா உணவகத்தில்பணிபுரியும் பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை அகற்றும்நிலை உள்ளது.
அம்மா உணவகம் முன்பு சுகாதாரக்கேடாக இருப்பதால் அங்கு சாப்பிட செல்லும் நோயாளிகள் தயக்கம்காட்டுகின்றனர். இதனை சரி செய்து அந்தப்பகுதியை சுகாதாரமான பகுதியாக மாற்றம் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.