/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையத்தை திறக்க வலியுறுத்தல்
/
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையத்தை திறக்க வலியுறுத்தல்
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையத்தை திறக்க வலியுறுத்தல்
புதிய கால்நடைநோய் புலனாய்வு மையத்தை திறக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 04:15 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் புதிதாக கட்டியுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மையம் பணிகள் முடிந்தும் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பணிகள் முடிந்து 3 மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பிற்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே புதர்மண்டி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில் ஒரிரு நாட்களில் மின் இணைப்பு வந்து விடும். ஆக.20ல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மையம் திறக்கப்பட உள்ளது என்றனர்.