/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
/
கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
ADDED : மார் 04, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி,: ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் அரசு நிலங்களை ஆய்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தின் விதிகளின்படி கடற்கரையிலிருந்து 100 மீ., வன உயிரினங்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பகுதியாகும். உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமாக கடற்கரை உள்ளது. சிலர் கடற்கரையோரப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, பாதையில் போக்குவரத்திற்கு இடையூறாக கம்பி வேலி அமைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க வேண்டும்.