/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதிமுத்தன் கிராமத்தில் ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
/
ஆதிமுத்தன் கிராமத்தில் ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2024 10:19 PM

ஆர்.எஸ்.மங்கலம், - புல்லமடை ஊராட்சியைச் சேர்ந்த ஆதிமுத்தன் கிராமத்தில் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
ஆதிமுத்தன் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த கிராமத்திற்கு, முறையான ரோடு வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரோடு சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், மாணவர்கள், விவசாயிகள் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் சீரமைப்பதாக வாக்குறுதி அளிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், வென்ற பின்பு கண்டு கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.