ADDED : ஜூலை 21, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் வேம்பார் உடைய அய்யனார், வாழவந்தாள் அம்மன் கோயில் பொங்கல், பூத்தட்டு விழா முன்னிட்டு 3ம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உட்பட மாவட்டங்களில் இருந்து 17 காளைகள் கலந்து கொண்டன.
ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமம் சார்பில் குத்து விளக்கு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. ஏற்பாடுகளை எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராம மக்கள் செய்தனர்.