/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகாசி விசாக திருவிழா: மே 13ல் கொடியேற்றம்
/
வைகாசி விசாக திருவிழா: மே 13ல் கொடியேற்றம்
ADDED : மே 09, 2024 05:10 AM
திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி விசாக திருவிழா மே 13ல் காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 21 மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரும், சிநேகவல்லி அமர்ந்த மற்றொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் இரவில் பூதம், கைலாசம், யானை, வெள்ளி ரிஷபம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலாவும், தினமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.
தேவஸ்தான செயல்அலுவலர் பாண்டியன் மற்றும் 22 கிராம நாட்டார்கள் அறக்கட்டளை சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.