/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியூரில் வருண பூஜை சமுத்திர தீர்த்த ஆரத்தி
/
மாரியூரில் வருண பூஜை சமுத்திர தீர்த்த ஆரத்தி
ADDED : மார் 13, 2025 04:47 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பவளநிற வல்லியம்மன், பூவேந்தியநாதர் கோயிலில் வருண பூஜை மற்றும் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா நடந்தது.
பழமையும் புரதான சிறப்பும் பெற்ற வருண பகவானால் பூஜிக்கப்பட்டது மாரியூர் பூவேந்தியநாதர் கோயில். இங்கு கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜையில் வேள்வி வளர்க்கப்பட்டு உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கடற்கரை சென்றடைந்த நிலையில் கடலில் கோயில் சிவாச்சாரியார்களால் வருண பகவானுக்கு மகா அபிஷேகம் கலசாபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து 108 அஷ்டோத்திர சத நாமாவளி தீபாராதனை, கடலுக்கு தீப, துாப ஆரத்தியும் நடந்தது. சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மாரியூர் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.