/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வினை தீர்க்கும் வேலவர் கோயில் வருஷாபிேஷகம்
/
வினை தீர்க்கும் வேலவர் கோயில் வருஷாபிேஷகம்
ADDED : மே 22, 2024 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் அருகேயுள்ள வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடந்தது.
பட்டணம்காத்தான் மல்லம்மாள் ஊரணி அருகேயுள்ள வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் மஹா கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெங்கடாஜலபதி பெருமாளுக்கும் வருஷாபிேஷக விழா நடந்தது.
காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

