/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
/
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 25, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே அ.தரைக்குடி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இங்கு ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா, கமுதி பகவதி அறக்கட்டளை இணைந்து மாணவர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் மாணவர்கள் ஊர்வலமாக சென்று 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர் விக்டோரியான் ஆலன், பேராசிரியர் பாண்டியன், வழக்கறிஞர் முனியசெல்வம், கடலாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளைபாண்டியன் உட்பட மாணவர்கள் உடன் இருந்தனர்.

